Advertiment

தமிழகம் திரும்பிய மாரியப்பனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

by Editor

விளையாட்டு
தமிழகம் திரும்பிய மாரியப்பனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய நிலையில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது

சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் நூலிழையில் தங்கப்பதக்கத்தை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லி வந்து இறங்கிய மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்த முறை ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நான் ஜப்பானில் தங்கம் வெல்ல முடியாது காரணம் அங்குள்ள தட்ப வெட்ப நிலையே என்று கூறினார்

இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாரியப்பன் மற்றும் பாரா ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை மரியாதை செய்து வரவேற்றனர். 

Share via