இன்று சபரிமலை ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பந்தள அரண்மனையிலிருந்து பந்தள அரச குடும்பத்தினரால் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படும் ஐயப்பனின் புனிதமான தங்க ஆபரணங்கள் கொண்டு வரப்பட்ட திருஆபரணங்கள் அனுவிக்கப்பட்டு, கருவறையில் சிறப்பு தீப ஆராதனை நடத்தப்பட்டது. திருவாவாரண அலங்காரத்திற்கு பிறகு பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்யக்கூடிய பக்தர்கள் மிக முக்கியமான மகரஜோதி பூஜையில் கலந்து கொள்வதை தங்கள் பாக்கியமாக கருதி இந்த பூஜைக்காக... இந்த மகர ஜோதி தரிசிப்பதற்காக.. காத்திருந்து தரிசனம் செய்வார். மகரஜோதியை காணுவது-- ஐயப்பனை தரிசிப்பதற்கு ஒப்பானதாக ஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை கொண்டு உள்ளார்கள்..ஜோதி தோன்றிய போது பக்தி பரவசத்தில் ஆழ்ந்து சரண கோஷங்களை முழங்கினர். சரணம், சரணம் ,,ஐயப்பா ,சாமியே, சரணம் ஐயப்பா போன்ற கோஷங்கள் மலை முழுவதும் எதிரொலித்தது.
மகர ஜோதி தரிசனம் என்பது வெறும் வழிபாடு மட்டுமின்றி அது ஓர் ஆழ்ந்த ஆன்மீக பயணமாக...வாழ்நாள் அனுபவமாக பக்தர்களுக்கு அமைகிறது.