Advertiment

குற்றால சித்திர சபையில் நடைபெறும் முக்கிய விழா மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம்

by Admin

ஆன்மீகம்
குற்றால சித்திர சபையில் நடைபெறும் முக்கிய விழா மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதத்தில் குற்றால சித்திர சபையில் நடைபெறும் முக்கிய விழா மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் .. இந்த ஆருத்ரா தரிசனம் என்பது சித்திர சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆருத்ரா தரிசன வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறும்

 அதாவது ,நடராஜர் சிலையாக இல்லாமல் ஓவிய வடிவில்  சித்திரமாக காட்சி அளிப்பது இதன் தனிச்சிறப்பாகும். மார்கழி மாதம் 10 ஆம்நாள் இந்த விழா நிகழ்வுறும்.

மார்கழி திருவாதிரை என்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்டு தரிசனம் செய்யும் ஒரு முக்கியமான வைபவம் ஆகும். இது ஆருத்ரா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து உருவானது .இந்த நாளில்  நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து திருவம்பாவை பாடல்களை பாடி சிவபெருமானை வழிபடுவார்கள்.. ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும் வடசொல் ஆகும்.., மார்கழி மாதத்தில் பௌர்ணமியில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படுவதால் இப்பெயர் பெற்றது..  சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திர நாளில் சிவ பெருமானை வழிபாட்டு ஆருத்ரா தரிசனத்தை காண்பதன் மூலம் பிறவி பயனை அடையலாம் என்று நம்பப்படுகிறது..

Share via

More Stories