கட்டாக்கில் நடந்த t20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி வந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடியது 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்த இந்திய அணி 176 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 12.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 74 ரன்கள் எடுத்தது.இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.