ராஜ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையேயான இரண்டாவது ஓ டி ஐ போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்கா அணி 49.2 ஓவரில் 6 விக்கெட்இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து இந்திய அணியை நாலு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் ஒன்று ஒன்று பெற்று இருப்பதால் இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியே தொடரை கைப்பற்றும். தம் சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இன்னும் நடைபெற உள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஓ டி ஐ போட்டி தொடரை கைப்பற்றும்.