மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள், தங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அருகிலுள்ள ஒரு கஃபேக்குச் சென்றபோது.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார்.
அந்த நபர் அவர்களில் ஒருவரை தகாத முறையில் தொட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வீராங்கனைகளின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில், இந்தூர் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளது..கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியைக் கண்டறிய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது..குற்றவாளி அகீல் கான் என்று காவல்துறை அடையாளம் கண்டு.உடனடியாகக் கைது செய்தது..குற்றவாளி மீது இந்திய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.. ஆஸ்திரேலியா மற்றும் பி.சி.சி.ஐ.கிரிக்கெட்சங்கம் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன...சம்பவத்திற்குப் பிறகு வீராங்கனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது...இந்தச் சம்பவம், உலக அளவிலும் கிரிக்கெட் உலகிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...