
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. கடைசி நாளான இன்று இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட சச்சின் ஆண்டர்சன் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றதையடுத்து தொடர் சமனில் முடிந்தது.