Advertiment

தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இருவருக்கு அரசு வேலை!

by Admin

விளையாட்டு
தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இருவருக்கு அரசு வேலை!

தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்த தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், சென்னை நேரு விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
 
விழாவில் கலந்துகொண்டு, வீரர், வீராங்கனைகளை வாழ்த்திய அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், ஒலிம்பிக்கில் பங்கேற்ற இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார். மேலும், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படும் எனவும், தடகள வீரர்கள் பயிற்சி பெறும் மாவட்டதிலேயே, நவீன சிந்தடிக் மைதானம் அமைத்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

Share via