Advertiment

3-வது இடத்தில் இந்திய வீரர் குகேஷ்

by Editor

விளையாட்டு
3-வது இடத்தில் இந்திய வீரர் குகேஷ்


கிராண்ட் செஸ் தொடரின் 10-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் 3-வது தொடர் குரோஷியாவில் நடந்தது.அதில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் குகேஷ் முதலிடம் பிடித்தார். ஆனால், ஒட்டு மொத்த பட்டியலில் கார்ல்சன் (22.5 புள்ளிகள்) முதல் இடமும், வெஸ்லே (20 புள்ளிகள்) 2-வது இடமும், குகேஷ் (19.5 புள்ளிகள்) 3-வது இடமும் பிடித்துள்ளனர்.

Share via