
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் உச்சகட்ட நாள்... அகமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மையத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்த இந்த கிரிக்கெட் திருவிழாவில் வெற்றி கோப்பை யாருக்கு கிடைக்கப் போகிறது என்கிற எதிர்பார்த்து போடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்று இரவில் விடை தெரியும். இவ்விரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்கிற கருத்துக் கணிப்பின்படி பெங்களூர் அணி 52 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்று 48 விழுக்காடும் வெளியாகி உள்ளது. இரு அணிகளும் கடுமையான போட்டிகளுக்கு இடையே முன்னேறி இன்று இறுதி களத்தில் நிற்கின்றன