
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நிலவு வரும் பதட்டமான சூழ்நிலையில் நேற்று தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளை ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பி சி சி ஐ இன் உயர் மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்பு ஒளிபரப்பு குழுவினர் மற்றும் லீக் தொடர்புடைய ஊழியர்கள் பாதுகாப்பின் அடிப்படையில் இந்த பதட்டமான சூழ்நிலையில் இந்த போட்டிகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக ஐ சி ஐ சி ஐ தெரிவித்துள்ளது. நிலைமை சீரான பின்பு போட்டி தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.