
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பதினாறு புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் வெற்றி வாய்ப்பு இழந்தது.