
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய சென்னை அணி 19.2 விக்கெட் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி 19.4 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் ஜாம்பவானாக இருந்த சென்னை அணி தற்பொழுது தொடர்ந்து தோல்வியை சந்தித்ததின் காரணமாக கடைசி வரிசையில் இருந்ததோடு சென்னை மைதானத்தில் 5 தோல்விகளை தழுவி தொடரிலிருந்து இந்த போட்டியின் மூலம் வெளியேற உள்ளது. அணியில் ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பி இருந்ததின் காரணமாக இந்த நிலை சென்னை அணிக்கு நிகழ்ந்துள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.