
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி எதிரொலியாக அடுத்தடுத்த போட்டிகளில் டிக்கெட் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. இயல்பாக டிக்கெட் விற்பனைக்கு முன்பாகவே நான்கிலிருந்து 5 லட்சம் ரசிகர்கள் வரிசையில் காத்திருப்பார்கள். இந்நிலையில், டிக்கெட் விற்பனை துவங்கியும் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரசிகர்கள் மட்டும் காத்திருக்கின்றனர். IPl சீசன் தொடக்கத்தில், அதிகபட்சம் 15 நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்துவிடும். இரண்டு மணி நேரம் ஆகியும் டிக்கெட் முழுமையாக விற்பனையாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.