Advertiment

சென்னை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை அணி

by Admin

விளையாட்டு
சென்னை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை அணி

மும்பை மான் கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின. டாஸ் வென்ற மும்பை அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா , ரிக்கல் டன் அடுத்தடுத்து சிக்ஸ்,போா் எனஎன்று எடுக்க.. 66 ரன் வருகையில் ரிக்கல் டன் அவுட் ஆகி ஒரு விக்கெட் இழப்பு ஏற்பட்டது.. மும்பை அணி தொடர்ச்சியாக விறுவிறுப்பாக ஆடி 15 புள்ளி நான்கு ஓவரில் 177 ரன்களை எடுத்து சென்னை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.. சென்னை அணியில் மும்பையைச் சேர்ந்த ஆயுஸ் மாத்ரா என்ற18 வயது வீரா் 32 ரன்களை எடுத்து நம்பிக்கைக்கு உரிய ஒரு வீரராக தன்னை நிரூபித்து விட்டு சென்றார். .மும்பை ஆடுகளம் ரோகித் சர்மாவின் ஆட்டத்திற்கு வலு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share via