
ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்.18) பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. இதில், மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி பெங்களூர் அணி 95 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதுகுறித்து சேவாக் கூறுகையில், “இந்த போட்டியில் விக்கெட்டுகள் சரியும் போது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அந்த பொது அறிவு கூட இல்லாத பெங்களூரு பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர்” என்றார்.