
லக்னோ எக்கானா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய லக்னோவா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது அடுத்த சென்னை அணி 19.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் ஐந்து தோல்விகளை கண்ட சென்னை அணி முதலாவது ஒரு வெற்றியை பெற்றிருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி 5 ஆண்டுகளுக்குப் பின் தனது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தினார்.