
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணி மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடலில் 17 ஆண்டுகளில் சென்னை அணி மிக மோசமான ரன்களை எடுத்து ஆட்டம் இழக்க... அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி பத்து புள்ளி ஒரு ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து சென்னை அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர் வீரர்களின் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோட்டை விட்டது இது போன்ற தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் தரப்பு விமர்சனமாக இருந்தது.