
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட்டு விற்பனை இன்று காலை ஆன்லைன் மூலமாக தொடங்கியது. விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னதாக சிஎஸ்கே - மும்பை போட்டிக்கான டிக்கெட்டும் இதேபோன்று விரைவாக விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.