
தெலுங்கானா ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் சன் ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்தது .ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியும் சென்னை அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னையனி பந்துவீச்சை தேர்வு செய்ய களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.