
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 18ஆவது சீசன் இன்று (மார்ச் 22) முதல் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை மழையால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.