
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸி., கேப்டனாக செயல்பட்ட இவர், இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் 73 ரன்கள் அடித்தார். ஆஸி., தோல்வியை தழுவிய நிலையில் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை ஸ்மித், 170 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் உட்பட 5800 ரன்கள் அடித்துள்ளார். மேலும், 2013, 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸி., அணியில் ஸ்மித் விளையாடியது குறிப்பிடத்தக்கது.