
கலரிங் செய்த ஹேர் ஸ்டைல், ஜொலிக்கும் சட்டை என வித்தியாசமான தோற்றத்தில், தோனி தோன்றும் ஐ.பி.எல். புரோமோ இணையத்தை கலக்கி வருகிறது.
கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐ.
பி.எல். போட்டிகள், வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.
பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியை வைத்து, அசத்தலான புரமோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
கலரிங் செய்த ஹேர் ஸ்டைல், ஜொலிக்கும் சட்டையுடன் தோனி போடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.