
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. 5 விக்கெட்களை அள்ளி ஆட்ட நாயகன் விருதை பெற்ற அவர் கூறுகையில், “இந்தப் போட்டியில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம், ஆரம்பம் முதலே அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். கோலி, ரோஹித், ஹர்திக் ஆகியோரை பார்த்து அதை கற்றேன்” என்றார்.