
பாகிஸ்தான் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐ சி சி கிரிக்கெட் கோப்பை காண போட்டி ஆப்கானிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.ஆப்கானிஸ்தான் அணி கடுமையாக போராடி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 50 ஓவரில் 325 ரன்கள் எடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. களத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்களை எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பை இந்த ஆட்டம் பொய்யாக்கியது குறிப்பிடத்தக்கது.