Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஜூனியர் மல்யுத்தம்:  இந்திய வீரர் பிபாஷா வெள்ளிப் பதக்கம்

by Editor

விளையாட்டு
ஜூனியர் மல்யுத்தம்:  இந்திய வீரர் பிபாஷா வெள்ளிப் பதக்கம்

 

உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை பிபாஷா வெள்ளி வென்றாார்.
ரஷியாவின் உபாவில் உலக ஜூனியர் மல்யுத்தம் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிபாஷா 76 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கைலி ரெனீ வெல்கரை எதிர்கொண்டார். இதில் பிபாஷா தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார். 62 கிலோ பிரிவு வீராங்கனையான சஞ்சு தேவி, அரையிறுதியில் அஜர்பைஜானின் பிர்குல் சோல்டானோவாவை 8- 5 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் ரஷியாவின் அலினா கசாபிவாவை எதிர்கொள்ள இருக்கிறார். அதேபோல், 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை பாதேரி - ருமேனியாவின் அமினா ரோக்ஸானா கபெஸானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். அதில் மால்டோவாவின் இரினா ரிகான்சியை சந்திக்கிறார்.

வெண்லகப் பதக்கத்துக்கான சுற்றுகளில் 50 கிலோ பிரிவில் சிம்ரன் 7- 3 என்ற கணக்கில் பெலாரஸின் நடாலியா வராகினாவையும், 55 கிலோ பிரிவில் சிதோ - தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் துருக்கியின் மெல்டா டெரென்க்ஸியையும் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றனர். குசும் (59 கிலோ), ஸ்னேஹா (72 கிலோ) ஆகியோா் அந்தச் சுற்றில் தோல்வி அடைந்தனர். பிங்கி (53 கிலோ), மான்சி (57 கிலோ) ஆகியோர் காலிறுதியில் தோல்வி அடைந்தனர்.

Share via