
ஐசிசி சாம்பியன் கோப்பை காண கிரிக்கெட் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான போட்டி இந்திய நேரம் படி மதியம் 1.30மணிக்கு நடைபெற உள்ளது. போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று 72 விழுக்காடு பாகிஸ்தான் அணி வெல்லும் என்று 28 விழுக்காடும் கருத்துக்கணிப்ப்பு வெளியாகி உள்ளது.. பாகிஸ்தான்- இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி உலக ரசிகர்களிடையே ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் போட்டியாகும்..
சென்னை மெரினா கடற்கரையில் அகன்ற திரையில் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய அளவிற்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகம் ஏன்... இந்தியா முழுவதும் ரசிகர்கள் இந்த கிரிக்கெட் போட்டியை காண்பதற்கான தீவிர நிலையில் உள்ளனர். பொதுவாக, ஞாயிற்றுக்கிழமை இந்திய ரசிகர்களுக்கு வெற்றியைத் தேடித் தரக் கூடிய ஒரு நாளாக அமையும் என்று ரசிகர்கள் தரப்பில் பேசு பொருளாக உள்ளது.