Advertiment

கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரூப்லெவ் - ஜாக் டிராபெர் மோதல்

by Staff

விளையாட்டு
கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரூப்லெவ் - ஜாக் டிராபெர் மோதல்

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பெலிக்ஸ் அகர் அலியாசிம் (கனடா) உடன் மோதினார். இதில் முதல் செட்டை ரூப்லெவ் கைப்பற்றிய நிலையில், 2ஆவது செட்டை அலியாசிம் கைப்பற்றினார். இறுதியில் ரூப்லெவ் 7-5, 4-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரூப்லெவ் - ஜாக் டிராபெர் மோதுகின்றனர்.

Share via