Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா..

by Admin

ஆன்மீகம்
 இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா..

 இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா.. 10 அவதாரங்களில் ஒ அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணர்  பிறப்பை கொண்டாடும் விழா இது. இது ஆவணி மாதம் தேய்பிறையின் எட்டாம் நட்சத்திரமான ரோகினி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.

ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி  என்று அழைக்கப்படுகின்ற இந்த கிருஷ்ண ஜெயந்தி ஆனது தேவகி- வாசுதேவர் ஆகியோரின் எட்டாவது மகனாக கிருஷ்ணர் பிறப்பை குறிக்கும் நாள்..

தாய்மாமன் கம்சாவின் உயிருக்கு கிருஷ்ணர் பிறப்பதின் மூலமாக ஆபத்து ஏற்படும் என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணரின்  தாய்மாமன் மதுரா சிறைச்சாலையில் தேவகியை அடைத்து வைக்க... நிறைமாதகர்பிணியான தேவகி அங்கே கிருஷ்ணரை பெற்றெடுக்கிறாள்.. தேவகியின் எட்டாவது மகன் பிறக்கின்ற பொழுது கம்சன் உயிருக்கு ஆபத்து என்பதை அசரீரி வழியாக உணர்ந்த கம்சன் தன் சகோதரியையும் தன் மைத்துனரையும் சிறையில் அடைத்தார்

. ஏற்கனவே பிறந்த குழந்தைகளை,  ஒவ்வொன்றாக பிறக்க.... பிறக்க  கொன்ற  கம்சன், கடைசியில் கிருஷ்ணர் பிறக்கக்கூடிய வேளையில் தன் சகோதரியை சிறையில் அடைத்தார். இந்நிலையில், சிறை காவலர்களின் கவனம் இல்லாத பொழுதில்.....கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார் . அவரை யமுனை ஆற்றில், யசோதை- நந்தா ஆகியோர் வளர்ப்பதற்காக தீர்மானிக்கப்பட்டு அவர்களிடம் குழந்தை அனுப்பப்பட்டது.  சிறையில் பிறந்த கிருஷ்ணரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு  கோகுலாஷ்டமி   இந்தியாவுக்குள் கொண்டாடப்படுகிறது.

எப்பொழுதெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ... அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக நான் அவதாரம் எடுப்பேன் என்று சொன்னதற்கு இணங்க .கிருஷ்ண பரமாத்வா பிறப்பு அமைகிறது. இந்நிகழ்வு ,இந்தியா முழுவதும் ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது .

வீடுகளில் தோரணங்கள் கட்டி.... வண்ணக் கோலங்கள் இட்டு ....கிருஷ்ணர் போன்று வேடமிட்ட குழந்தைகளுடைய பாதத்தை வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும்.... மாக்கரசலில் காலடி எடுத்து வைத்து.... கிருஷ்ணர் வீட்டுக்குள் வருவது போன்ற ஐதீக நடைமுறைகள் பின்பற்றப்படும் ..கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் ,முறுக்கு, சீடை, அதிரசம், அவல்பாயாசம் போன்ற பலகாரங்கள் படைக்கப்பட்டு வழிபடப்படும். இன்று முழுவதும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விரதம் இருந்து கோகுலாஷ்டமியை கொண்டாடி மகிழ்வர்.

Share via