Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் -

by Admin

ஆன்மீகம்
பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் -

மழை வேண்டியும், நாடு நகரம் செழிப்புடன் வளம் கொழிக்கவும் அனைவரும் நலமுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும் ஆடியும் பெருமாளை தரிசித்தனர்.      

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அனைவரும் நலமுடன் வாழவும், மழை வேண்டியும், நாடு நகரம் செழிப்புடன் வளம் கொழிக்கவும் நடைபெற்ற இத்த திருக்கல்யாணத்தை திருக்குறங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமான் மாப்பிள்ளை பட்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமாங்கல்யத்தை நடத்தி வைத்தார்

இத்திருக்கல்யாணத்தில் முக்கனிகள், சர்க்கரை, வெல்லம், பருப்பு, அரிசி, மஞ்சள், குங்குமம், கற்கண்டு, வளையல்கள் போன்ற பொருட்கள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே யாகம் வளர்க்கப்பட்டது. அர்ச்சகர்கள் மந்திரத்தை சொல்லி யாகத்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி புண்ணிய காரணமும், ரக்ஷா பந்தனமும், அக்னி பிரவேசமும், சங்கல்பம், மகா சங்கல்பம் பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கியது.

மாப்பிள்ளை பெருமாளுக்கு பட்டு வேட்டியும், பட்டு அங்கவஸ்திரம், பீதாம்பரமும், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மஞ்சள் ‌‌நிற‌ப் பட்டும் அணிவிக்கப்பட்டது. பெருமாள் கையில் மஞ்சள்காப்பு கயிறு கட்டப்பட்டது. பின்னர் தேங்காயில் மஞ்சள் தடவி வைக்கப்பட்டிருந்த திருமங்கல்யம் பெருமாளின் கைகளில் வைத்து ஒற்றி எடுத்து பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது.

பெருமா‌ள் - ப‌த்மாவ‌தி ‌திரு‌க்க‌ல்யாண வைபோக‌த்தை‌க் க‌ண்ட பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா என்று பக்தி முழக்கம் எழுப்பினர். பின்னர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

இத்திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனைப் பாடல்கள் பாடியும் ஆடியும் மகிழ்ந்தனர்.

 

Share via