
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது
. இப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதில் தமிழக வீரர் அஷ்வின் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ஆல்ரவுண்டர் மொயின் அலி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு அணியும் முதல் வெற்றிக்காக இந்த போட்டியில் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.