Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

குபேர பௌர்ணமி கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கடல் ஆரத்தி.....

by Admin

ஆன்மீகம்
 குபேர பௌர்ணமி கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கடல் ஆரத்தி.....

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலானது அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். மேலும் இந்த கோவில் கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை திருவிழா காலங்களில் தவிர்த்து அதிகரித்து வருகிறது. எந்த நிலையில் பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கடல் ஆரத்தி எடுத்து சமுத்திர அபிஷேகத்தில் கலந்து கொண்டு இரவு கடற்கரையில் தங்கி அதிகாலையில் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் நேற்று பௌர்ணமி தினத்தில் கோவிலில் குவிந்தனர். ஆனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி குபேர பௌர்ணமியாக கருதப்படுவதால் இந்த பௌர்ணமி தினத்தில் வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது கருதப்படுகிறது. இதனால் கோவில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் கோவில் கடலுக்கு சமுத்திர அபிஷேகம் ஆரத்தி எடுத்து வழிபட்ட பின் கோவில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி பௌர்ணமி நிலவை வழிபட்டு காலையில் எழுந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யதனர்.

Share via