Advertiment

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்- உற்சாக வரவேற்பு

by Admin

விளையாட்டு
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்- உற்சாக வரவேற்பு

விளையாட்டு வீரர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தினர், ரசிகர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்- உற்சாக வரவேற்பு
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை வரவேற்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்-வீராங்கனைகள் இன்று நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பதக்கம் வென்ற அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தினர், ரசிகர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியிலும் திரண்டிருந்த ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

பதக்கம் வென்ற வீரர்கள், வரவேற்பைத் தொடர்ந்து பேருந்துகளில் ஏறி, விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். 

Share via