Advertiment

வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

by Editor

சுற்றுலா
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஆறுகளில் நீர் வரதும் அதிகரித்து வரும் நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ் நிலை உருவாகி உள்ளது.. இதனால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள்அதிகம் படையெடுத்து வருகின்றனர். இங்குள்ள கூலாங்கள் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, சோலையறு அணை, போன்ற இடங்களில்  பார்வையிட்டும்  செல்பீ எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ தடை விதித்துள்ளது
வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து சுற்றுலா இடங்களில் அருகில் நின்று இயற்க்கை அழகை ரசித்தும் போட்டோ எடுத்தும் ரசித்து வருகின்றனர். மேலும் நகர பகுதியில் போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது. காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்து நெரிசல் ஏற்படாதவாறு கண்காணித்து வருகின்றனர்.

Share via