
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும் இந்த காலங்களில் இங்கு பெய்யும் சாரல் மழையில் நனைந்து அருவிகளின் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது சீசன் காலம் என்பதாலும் இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பிரதான அருவியில் நீராடுவதற்காக திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில தினங்களாக குற்றாலம் வனப் பகுதியில் மழை இல்லாததன் காரணமாக நீர்வரத்து சற்று குறைந்திருந்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. ஆண்கள் குளிக்கும் பகுதியில் தாராளமாக தண்ணீர் கொட்டினாலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் குறைவாகக் கொட்டுவதால் பெண்கள் நீண்ட நேரம் என்று குளித்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இருப்பினும் பெண்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று குளித்து சென்ற வண்ண உள்ளனர்.