Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தமிழகத்திலேயே முதல் முறையாக மிதக்கும் சொகுசு கப்பல் உணவகம்.

by Editor

சுற்றுலா
தமிழகத்திலேயே முதல் முறையாக மிதக்கும் சொகுசு கப்பல் உணவகம்.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மற்றும் கொச்சினைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் இணைந்து, தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை முட்டுக்காடு பகுதியில் உருவாக்கி உள்ளனர். வாரம் முழுக்க அனைத்து நாள்களிலும் இந்த கப்பல் காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் வகையில் மிதக்கும் சொகுசு கப்பல் உணவகத்தை நிறுவி உள்ளனர்.

  'சீன்ஸ் க்ரூஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் அமைந்துள்ள ஒட்டுமொத்த உணவகமும் குளிர்சாதன வசதி கொண்டது. அலுவலக கூட்டங்கள், சிறிய விருந்து அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றை மக்கள் இங்கே நடத்திக்கொள்ளலாம். 

100 பேர் வரை இருக்கக்கூடிய இருக்கை வசதி மற்றும் விருந்து மண்டபம் கொண்ட திறந்த மேல் தளம் உள்ளது. இரண்டாவது தளம் உணவு சாப்பிடும் இடமாகவும், பப்பே முறையில் உணவு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்கும் விருந்துகளில் அதற்கேற்ப உணவுகள் மாறும் என்றும் கூறப்படுகிறது.இந்த மிதக்கும் கப்பல் திருமண நிகழ்வுகள், பெருநிறுவனக் கூட்டங்கள், குடும்ப விழாக்கள், சிறிய அளவிலான துவக்க நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

Share via