Advertiment

இன்று முதல் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி

by Admin

ஆன்மீகம்
 இன்று முதல் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி

 

 

ஸ்ரீவில்லிபுத்தூா்மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பெளா்ணமி, பிரதோஷ வழிபாட்டுக்காக இன்று(ஜன. 23) முதல்நான்கு நாள்கள் வழிபாடு மேற்கொள்ள பக்தா்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம்-சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இக் கோயில்களுக்கு  10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுவா். மழை காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாகபக்தா்கள் கோயிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில், தை  பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக, இன்று செவ்வாய்க்கிழமை =ஜன.23முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரிக்குச் செல்வதற்கு வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. மழை பெய்தால், அனுமதி ரத்து செய்யப்படும்என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories