Advertiment

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

by Editor

ஆன்மீகம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி மாதம் அம்மன் மாதம் என்று பக்தர்கள் பக்தியுடன் தமிழகத்தின் புகழ் பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று வருகின்றனர். ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இன்னும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. 


இந்நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  ஆடி மாதம் 2வது வெள்ளி கிழமையை ஒட்டி சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து பக்தி பரவசம் அடைந்தனர்.


ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் மட்டும் அம்மன் சக்திக்குள் சிவன் சக்தி அடக்கமாகி விடும். பக்தர்கள் வேண்டியதனை நிறைவேற்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு 200 லிட்டருக்கும் மேற்பட்ட பாலில் பாலாபிஷேகம் நடைப்பெற்றது. 


மேலும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் தீச்சட்டி ஏந்துதல், கரும்பு தொட்டில் தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்தினர்.

Share via

More Stories