Advertiment

சனி பெயர்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி....

by Admin

ஆன்மீகம்
சனி பெயர்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி....

சனி பெயர்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழவுள்ளதாக திருநள்ளார் தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடந்த சனி பெயர்ச்சி  திருக்கணித அடிப்படையில்  நிகழ்ந்திருப்பதாகவும்  டிசம்பர் மாதத்தில் நடக்கக்கூடிய சனிப்பெயர்ச்சி தான் உண்மையான சனி பெயர்ச்சி என்றும் ஒரு தரப்பினர் வாதத்தை முன் வைக்கிறார்கள்....

பொதுவாக, சனி என்றாலே பயந்து நடுங்குவர். ஒன்பது கிரகங்களில் மெதுவாக செல்லக்கூடிய ஒரு கிரகம் தான் சனி. ஜோதிடசாஸ்திரப்படி சனி  அசுப கிரகமாக சொல்லப்படுகிறது .

சனியை போல் கொடுப்பாருமில்லை .சனியை போல் கெடுப்பாருமில்லை என்கிற சொல் ஒன்று உண்டு.

சனி எப்பொழுதுமே நீதிவானாக இருக்கக்கூடியவர்.. தவறுகளை செய்யக் கூடியவர்களுக்கு தண்டனையையும் நல்லதை செய்தவர்களுக்கு நல்ல பலன்களையும் அளிக்கக் கூடியவர்

. ஒரு கிரகத்தில் இரண்டரை ஆண்டு காலமாக  தங்கி இருந்து ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையில் நல்லதையும் கெட்டதையும் செய்யக் கூடியவராக காட்சி அளிக்கிறார்.

பொதுவாக ,சனி பெயர்ச்சியை ஏழரைச் சனி என்றும் மங்கு சனி என்றும் பொங்கு சனி என்றும் தங்கு சனி என்றும் மரண சனி என்றும் ஐந்து வகையாக பிரித்து சொல்லுவார்..

ஏழரைச் சனி காலகட்டத்தில் பல்வேறு துயரங்களை சனி கொடுப்பார்.. குடும்பத்திற்குள் குழப்பம், ,திருமண தடை, தொழில் தடை, செல்வ இழப்பு, நோய் படுதல் ,கணவன்- மனைவி பிரிவு, இல்லை... கருத்து வேறுபாடு ,பிள்ளைகளோடு சண்டை- சச்சரவு, உடல் ரீதியாக அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ தொந்தரவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். சனியினுடைய காலகட்டத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய துயரம் மிக... மிக அதிகமாகவே இருக்கின்றது. இருப்பினும், ஒரு மனிதர் நல்லவராக- நியாய- தர்மத்தின் படி நியாயமான முறையில் வாழ்வாரானால், அவருக்கு சனி எந்த விதத்திலும் கெடுதல் செய்யாமல் நல்ல பலன்களை வழங்காவிட்டாலும் கெடுதல் பலன்கள் வராமல் பார்த்துக்கொள்வாா் என்று சொல்லப்படுவது உண்டு.   எதிர்பாராதநேரத்தில் பல்வேறு நன்மைகளை செய்யக்கூடியவராக சனி இருக்கிறாா்..இதை எல்லோரும் அறிவர்.

இப்பொழுது வரப்போகிற...  டிசம்பர் சனி பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழக்கூடிய ஒன்றாக சொல்லப்படுகிறது.. எது, எப்படியோ சனி கெடுதல் தரக்கூடியவராக காட்சி தந்தாலும் அவர். செல்கிற பொழுது நிலையான- பல நல்ல விஷயங்களை தந்து விட்டு செல்வதை அனுபவரீதியாக பலர் உணர்ந்து இருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை..

Share via

More Stories