Advertiment

பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு

by Editor

ஆன்மீகம்
பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில்  நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு  நடைபெற்றது

இக்கோயிலின் கந்த சஷ்டி திருவிழா நவ.11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை ,மாலை சுவாமி புறப்பாடு ,சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

திருமலைக்கோயில் மலையடிவாரமான வண்டாடும்பொட்டலில் வைத்து 17ம் தேதி பெருந்திருப்பாவாடை நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை  சூரசம்ஹாரம்  நடைபெற்றது. இன்று சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும் தொடர்ந்து தேரோட்டமும் பெற்றது தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விரதமிருக்கும்  நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண்    பக்தர்கள்  தரையில் விழுந்து கும்பிட்டு சரணம் நேர்த்தி கடனை    செலுத்தினர் ஏற்கெனவே மழை பெய்து தேர் செல்லும் பாதை ஈரமான நிலையில் இருந்த போதும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிட சரணம் நேர்த்திக் கடனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது    
இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Share via

More Stories