
இன்று மதியம் 2 மணி அளவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ,இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இமாச்சலப் பிரதேஷ் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில்மோதுகின்றன.. வலுவான நிலையில் உள்ள இரண்டு அணிகளும் மோதுவதால் ,எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பில், இந்திய அணி 68 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் நியூஸிலாந்து அணி 32 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது .நான்கு போட்டிகளில் நான்கையும் அடைந்துள்ள இரு அணிகளில் ரன் மதிப்பீடு அடிப்படையில் முதலாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை- வலுவான அணியாக இருக்கும் இந்திய அணி தன் சொந்த மண்ணில் வீழ்த்தி, முதல் இடத்தை பிடிக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.