Advertiment

ஒலிம்பிக் 13 வயது ஜப்பான் சிறுமிக்கு தங்கப்பதக்கம்

by Editor

விளையாட்டு
ஒலிம்பிக் 13 வயது ஜப்பான் சிறுமிக்கு  தங்கப்பதக்கம்



டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 13 வயதான ஜப்பானை சேர்ந்த சிறுமி நிஷியா மோமிஜி தங்கம் வென்று உள்ளார்.


இதன் மூலம் பதக்க பட்டியலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் ஜப்பான் உள்ளது. அதே போல் ரஷியாவை சேர்ந்த 13 வயது ராய்சா லீல் வெள்ளி பதக்கத்தை வென்றார். ஜப்பானின் பனா நாகயமா வெண்கலபதக்கம் வென்றார்.


தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜூடோ போட்டியில் ஆண்கள் 66 கிலோ பிரிவில் ஜப்பானின் ஹிபுருமி அபேவும், பெண்கள் 52 கிலோ பிரிவில் அவரது தங்கை உடே அபேவும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே நாளில் அண்ணன் தங்கை தங்கம் வெல்வது முதல் முறையாகும்.

Share via