Advertiment

நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களின் சிறப்பு கண்காட்சி.

by Admin

ஆன்மீகம்
நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களின் சிறப்பு கண்காட்சி.

நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களின் சிறப்பு கண்காட்சி. பொதுமக்கள் பத்தாயிரத்திற்கும்  மேற்பட்டோர் பங்கேற்பு.

திண்டுக்கல்  பேகம்பூரில் உள்ள ஹாஜி. டி.எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் நகரில் எம்.கே.முஹம்மது இஸ்மாயில், எம்.சேக்பரீத் எம்.சாகுல்அமீது, எம்.அப்பாஸ் அவர்களுடைய இல்லத்தில் புனித நபிகள் நாயகம் பிறந்த மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தை (மீலாது நபி விழா)  சிறப்பிக்கும் வகையில்  கம்பம் அம்பா நாயகம் அவர்களின் வலித்தோன்றல்களால் பாதுகாக்கப்பட்டு வரும் நபிகள் நாயகத்தின் புனிதப் பொருட்கள் கண்காட்சி திண்டுக்கலில் ஹாஜி.டி.எஸ்.ஏ.ரஹ்மத்துல்லாஹ் நகரில் உள்ள இல்லத்தில் பகல் 2:30 மணி முதல் இரவு 12 மணி வரை திண்டுக்கல் மாநகர் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது .இதில்  சுமார் பத்தாயிரத்திற்கும்  அதிகமான மக்கள்  கண்குளிர கண்டு பயனடைந்து சென்றார்கள் ..இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டும் எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல் அமைதியான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றது..இது போன்று நிக்ச்சிகள் பல நகரங்களிலும், பல நாடுகளிலும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது..

 

Share via