
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊத்து பகுதியில் அரிக்கொம்பன் யானை முகாமிட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 19ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை மீண்டும் அப்பர் கோதையார் பகுதிக்கு சென்றதால் இன்று முதல் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.