Advertiment

13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில் அல்ல, உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ...

by Admin

விளையாட்டு
13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில் அல்ல, உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ...


 
ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில், பயிற்சியில் உள்ள இளம் ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக உலக கேடட் சாம்யின்ஷிப் போட்டி  நடைபெற்றது. கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை நடந்து முடிந்த இப்போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்தம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழான போட்டியில் வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
இதில் வீரர்கள் சிறப்பாக விளையாடியதன் அடையாளமாக இந்தியாவிற்கு 5 தங்கம் உள்பட 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
 
இந்தநிலையில் வெற்றியுடன் இந்தியா திரும்பும் இளம் வீரர்களை வாழ்த்தியுள்ள பிரதமர் மோடி, அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Share via