Advertiment

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதைக்கு சிறப்பு பூஜைகள்

by Admin

ஆன்மீகம்
 கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதைக்கு சிறப்பு பூஜைகள்

ஸ்ரீ பிருந்தாவன் தியான மடத்தில் 11ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து நடனமாடி அசத்திய குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.

 

 

 

கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிருந்தாவன் தியான மடத்தில் 11ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதைக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீவாரணங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து குழந்தைகளுக்கு நடனமாடி அசத்தினர். இவ்விழாவில்  முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து நடனமாடி அசத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இவ்விழாவில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், இனாம்மணியாச்சி பஞ்சாயத்து துணை தலைவி ரேவதி,மாணவரணி மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ், அம்பிகை பாலன், சாப்டூர் அப்பன், கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Share via

More Stories