Advertiment

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு 235 கிராம் எடை கொண்ட தங்கக் கிளி காணிக்கை

by Editor

ஆன்மீகம்
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு  235 கிராம் எடை கொண்ட தங்கக் கிளி காணிக்கை

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினசரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களின் பலர் ரொக்க பணம், தங்கம், வெள்ளி, ஆபரணம் என பல விதங்களில் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில், ராஜரத்தினம், ரேவதி தம்பதியினர் ,நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு 235 கிராம் எடை கொண்ட தங்கக் கிளியை காணிக்கையாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கிச் சென்றுள்ளனர்.

Share via