Advertiment

சென்னை காளிகாம்பாள் கோவிலில் வசந்த நவராத்திரி விழா

by Admin

ஆன்மீகம்
சென்னை காளிகாம்பாள் கோவிலில் வசந்த நவராத்திரி விழா

சென்னையில் புகழ்பெற்று விளங்கும் ஆலயமான அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலில்நாளகைாலை 10.00மணிக்கு வசந்த காலநவராத்திரி விழா நடைபெறவுள்ளது.இவ்விழா 22.03.2023 முதல் 30.03.2023 வரை நடைபெறுகிறது.வசந்த நவராத்திரி புண்ணிய காலத்தில் குங்கும லட்சார்ச்சனை நடைபெற உள்ளது .அன்றிலிருந்து  அன்னை  காளிகாம்பாளுக்கு1 000  நாமாக்களை  கொண்டு அம்பிகையின்  பாத கமலத்தில்  சிவாச்சாரியர்களால்  குங்குமலட்சார்ச்சனை நடைபெறும்..இந்நிகழ்வை விஸ்வகர்மா சேவர்த்திகள் சங்கம் செய்து வருகிறது.ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட ஆலயம் என்பதால் அனனை காளிகாம்பாளிடம் வேண்டுகின்ற வேண்டுதல்கள் அளனத்தும்  நடக்கும்  .அம்பாள் மேற்கு நோக்கி இருப்பதால்,இங்கு வழிபடுபவர்கள். வாழ்வில் உயர்வும் மோட்சமும் கிடைக்கும்.திருவண்ணாமலை,சிதம்பரம்,காளையார் கோவிலுக்குச்சென்று வந்தால் கிடைக்கும் நற்பலனை அன்னையான காளிகாம்பாள் ஒரே இடத்திலிருந்து அருளுகிறாள் .அவள் குங்குமபிரசாதம் பெற்றாலே இன்னல்கள்  விலகி  குடும்பம்
மகிழ்ச்சியில்  திளைக்கும் என்பது நம்பிக்கை .காளிகாம்பாள்  இரு கைகளும் லட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் புராணங்கள் புகழ்கின்ற  பெருமைக்குரிய  பேரருள் பொங்கும் பெருந்தலமிது.

Share via

More Stories