Advertiment

திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழா 26ஆம் தேதி கொடி யேற்றம். 

by Editor

ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழா 26ஆம் தேதி கொடி யேற்றம். 

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி சூரசம்ஹார லீலை, மறுநாள் பட்டாபிஷேகம், தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. மறுநாள் காலை 6 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Share via

More Stories