Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.

by Editor

சுற்றுலா
திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை அடிக்கடிஉப்பு காற்றினால்சேதம்அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்புகாற்றின்பாதிப்பில் இருந்து  திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு திருவள்ளுவர்சிலை பராம ரிப்புபணியானது ரூ1கோடி செலவில் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது. அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது.அதைத் தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவது மாக சுத்தம் செய்யப்பட் டது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசும்பணிநிறை வடைந்து உள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது. இதைத் தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு இன்று  முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலைக்கு படகு போக்கு வரத்துஇயக்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிஅளிக்கபட்டுள்ளதால்  சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share via